இந்தியா

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு எதிர்பாரா அளவில் அதிகரித்துவருவதால் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மதுரை, சுற்றுப்புறங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஜூன் 30 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மதுரை மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது :

மதுரை மாநகராட்சி பகுதி மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் மக்கள் தொகை அதிகம் என்பதாலும், மக்கள் வாழும் அங்குள்ள குடிமனைகள் நெருக்கமாகவும் வசதி குறுகலாகவும் இருப்பதால் கொரொனா தொற்று அதிகமாகி வருகிறது. அதோடு மக்களின் மாவட்டங்களுக்குள் நடக்கும் போக்குவரத்தினாலும் தொற்று அதிகமாவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்தி தொற்றிலிருந்து மக்களை விலக்கி வைப்பதற்கான அவசியம் குறித்து மண்டல குழுக்கள் மாவட்ட போலிஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகியவற்றின் ஊரக வட்டாரங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கருத்து கூறப்பட்டது.

ஆக மேற்கூறப்பட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணியிலிருந்து 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

எனினும் அத்தியாவசிய சேவைகளான மருத்துவ தேவைகளுக்கு மட்டும் சில கட்டுபாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.