இந்தியா

ஒடிசா மாநிலத்தில் பூரி ஜெகன்நாதர் யாத்திரை இவ்வாண்டு பக்தர்கள் இன்றி ஆரம்பமானது.

இந்தியாவின் புகழ்பெற்ற ஒடிசாவின் பூரி ஜெகந்நாத் ரதயாத்திரை கொரோனா நோய்த்தொற்றால் நிறுத்தப்படவேண்டாம் என நேற்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது, எனினும் பக்கதர்கள் இதில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தது.

இந்நிலையில் இன்று காலை ஜெகன்நாதர் ரதபவணி தேவையான தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆரம்பமானது, இதற்காக கொரோனா மருத்துவ பரிசோதனை கடந்த திங்கள் அன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா நோய்த்தொற்று இல்லாதவர்களாக அடையாளங்காணப்பட்ட 1500 பேர் மட்டுமே ரதத்தினை வடம் பிடித்து இழுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரம்பரியமிக்க இந்த பூரி ஜெகன்நாதர் உற்சவம் கொரோனா நெருக்கடியின் மத்தியில் வரலாற்றிலேயே இவ்வாறு நிகழ்த்தப்படுவது சவாலானதும் முதன்முறையானதும் என கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.