இந்தியா

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2516 ஆக தமிழகத்தில் பதிவாகியிருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று வெளியிட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று தொடர்பான தமிழக சுகாதரத்துறையின் அறிவிப்பில் தழகத்தில் இன்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,516 எனவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை இன்று 1,380 ஆக பதிவாகி மொத்தம் 44,205பேர் வரை உறுதிபடுத்தப்பட்ட நிலையில் உள்ளனர். சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் இன்று உறுதிபடுத்தப்பட்ட வழக்குகளாக

திருவள்ளூரில் - 156
செங்கல்பட்டு - 146
காஞ்சிபுரத்தில் - 59 ஆகவுள்ளது

இது தவிர மதுரையில் இன்று 137 பேருக்கும், திருவண்ணாமலையில் 114 பேருக்குமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் 1,227பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையடுத்து கொரோனா நோய்தொற்று சிகிச்சை முடிந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.