இந்தியா

இந்திய - சீனப்படைகள் லடாக் எல்லையிருந்து தமது படைகளை திரும்ப பெற இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

கடந்த மாதம் சீன ராணுவம் லடாக்கின் கிழக்கே உள்ள சில பகுதிகளிலும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் ஊடுருவியதால் இந்தியா - சீனா இராணுவ விரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பெரும் பதற்ற நிலை உருவானது.

அதனையடுத்து இரு நாட்டு தரப்புகளும் இராணுவ அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் தொடர்ந்து எல்லைப்பகுதியில் பதற்றநிலை நீடித்து வந்தது. மீண்டும் கடந்த 6ஆம் திகதி லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் தமது படைகளை மோதல் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து திரும்பபெருவது என ஒரு மித்த முடிவு எட்டப்பட்டது. எனினும் இப் பணிகளின் போது கடந்த 15ஆம் திகதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு உயிரிழப்புக்களை சந்தித்தன.

இதனைத் தொடர்ந்து 3நாட்கள் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை பயனளிக்காமல் போகவே இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நேற்று முன்தினம் லடாக் எல்லையில் எல்லைப்படை சந்திப்பு முனையின் சீன பகுதிக்குள் நடந்தன.
இதில் எல்லைப்பகுதியில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்தும் சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா - சீன இருதரப்பும் தத் தமது படைகளை விலக்கி கொள்ளும் உடன்படிக்கைக்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது, அதன் படி பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தரப்பிலும் படைகளை விலக்கிக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக முன்னேடுத்து செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக ர்ரணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் லடாக் பகுதியின் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து போர் பதற்றத்தை இல்லாமல் செய்ய இந்த இரு நாடுகளும் எடுத்த ஒருமித்த முடிவு உறுதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.