இந்தியா

இந்தியாவில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

இன்று காணொலிக் காட்சி மூலம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது இந்தியா முழுவதும் உள்ள 1500 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வு வங்கியின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் 8 கோடி லட்சம் முதலீட்டாளர்களின் கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் கோடி பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

பொது பணத்தை வைத்திருக்கும் இந்த வங்கிகளின் பொறுப்புணர்வை மேம்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது. அதோடு பிப்ரவரி மாதத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை அறிவித்திருந்தார், மேலும் இது வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் திருத்தத்தின் மூலம் செய்யப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.