இந்தியா

தமிழகத்தில் கரனோனா ஊரடங்கைக் காரணம் காட்டி, தமிழகத்தின் தூத்துகுடியை ஒட்டிய சாத்தான் குளத்தில் தந்தையும் மகனும் போலீஸ் நிகழ்த்திய வன்முறையில் மரணமடைந்துள்ளனர்.

இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளைகிளப்பியுள்ளது. வைகோ, மு.க.ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட பலரும் தந்தை மகன் மரணத்துக்கு கடும் எதிர்ப்பினை நேற்று பதிவு செய்திருந்த நிலையில் ‘மே 17’ இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்:

“சாத்தன்குளத்தில் நடந்த தந்தை-மகன் படுகொலைக்கு நீதி வேண்டும். கொரொனோ நெருக்கடியைப் பயன்படுத்தி அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. படுகொலை செய்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்.

அரச ஊழியர்கள்-காவலர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? சாமானியர்களின் உயிர் மதிப்பற்றதா? அரசின் ஆதரவில்லாமல் இதுபோன்ற வன்முறைகள் சாத்தியமில்லை.

கோவைப்பகுதியில் சாராயக்கடையை எதிர்த்துப் போராடிய பெண்களை அறைந்த அதிகாரியின் வன்முறை காணொளியாக அம்பலமான பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருச்சியில் வாகனத்தில் சென்ற கணவன் -மனைவிக்கு நடந்த வன்முறை, மதுரையில் கர்பிணிப் பெண்ணுக்கு நிகழ்ந்த வன்முறை என அரச நிறுவனங்களின் வன்முறைகள் தண்டிக்கப்பட்டதில்லை.

ஸ்டெர்லைட்டில் நடந்த படுகொலையை நிகழ்த்திய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கைகள் ஏதுமில்லை.

ஸ்னோலினை படுகொலை செய்த கரங்களில் இதுவரை விலங்குகள் பூட்டப்படவில்லை என்பதே இது போன்ற வன்முறைகள் தொடர்ந்து நிகழக் காரணம்.

உங்கள் வன்முறையின் கீழ் எங்கள் மக்களால் வாழ இயலவில்லை. அரசே! உன் வன்முறையை உடனே நிறுத்து.
அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டவர்களா நீங்கள்? அமெரிக்காவில் நிகழும் மக்கள் எழுச்சியைக் கண்டும் பாடம் கற்கவில்லையா?

அதிகாரமென்பது மக்களைக் காக்க உதவாதெனில், மக்களை சித்தரவதை செய்யுமெனில், உங்கள் அரசு நிறுவனங்கள் மக்களை வழிநடத்த லாயக்கற்றவை, உளுத்துப் போனவை.

ஆங்கிலேயன் கற்றுக்கொடுத்த அடக்குமுறை பயிற்சியால், மக்களை ஒடுக்கும் காவல்துறையை நோக்கி மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பார்கள்?

மக்கள் அணி திரளாமல் விடிவு இல்லை.
இப்படிக்கு

திருமுருகன் காந்தி

- என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.