இந்தியா

இந்தியாவில் ஒரே நாளின் கொரோன நோய்த்தொற்றின் தாக்கமா 17 ஆயிரத்தை நெருங்கி வருவதாகவும் இதனால் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 4.7லட்சமாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்புக்கள் ஒரு நாளில் 16,922 ஆக பதிவு செய்யப்பட்டதால் நாடு தழுவிய ஒரு நாள் பாதிப்பின் வீதம் இதுவரை இல்லாத அளவு அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1,86,514 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். 418பேர் கடந்த 24 மணி நேரத்தில் மரணித்துள்ளனர். இதனால் 14,894 மொத்த இறப்பு எண்ணிக்கையாக உள்ளது.

இந்தியாவின் டெல்லியில் 3,788பேர் புதிதாக அடையாளங்காணப்பட்டு மொத்த எண்ணிக்கை 70,390ஆக உள்ளது, அதே போல் மும்பையில் 69,625 பேர் இதுவரை கொரோனா பாதிப்பாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.