இந்தியா

தமிழகத்தின் தென் மாவட்டமான திருநெல்வேலி நகரில் உள்ளது உலகப் புகழ்பேற்ற ‘இருட்டு லாலா அல்வா கடை’ அதன் அதிபர் ஹரிசிங் தனக்கு கோரோனா பெருந்தொற்று உறுதியானதில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

‘கேவலம் ஒரு நோயால் சாக எனக்கு விருப்பமில்லை’ என அவர் கூறியதாகவும் அதனாலேயே அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் தெரியவருகிறது.

தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் பல உணவு வகைகள் பிரபலம். எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு இருந்தாலும் நம் நினைவுக்கு வருவதென்னவோ இந்த லாலா இருட்டுக்கடை அல்வா தான்.

இருட்டுக்கடையின் சுருக்கமான வரலாறு

1940களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் துவங்கப்பட்டு இப்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது. அந்த மூன்றாம் தலைமுறையில் 65 வயது ஹரிசிங் தான் தனது மகன்களுடன் இந்தக் கடையை நடத்தி வந்தார். இருட்டுக்கடை அல்வாவிற்கென்று பிரத்யேக சுவை வரக் காரணம் அல்வா செய்ய பயன்படுத்தும் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் கைகளால் தான் அரைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் இந்த அல்வாவிற்கான பிரத்தேக சுவையை தருவதாக சொல்லப்படுகிறது. கைகளால் தான் அல்வா கிண்டுகிறார்கள் என்பதால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு அல்வா மட்டுமே தயார் செய்கிறார்கள்.

அதனால் கடை திறந்ததும் கூட்டம் அலைமோதும். சரியாக 1 மணிநேரத்துக்குள் அல்வா விற்றுத் தீர்ந்துவிடும். வெளிநாடுகளிலிருந்து பத்து கிலோ வரை ஏற்றுமதி ஆர்டரும் வரும்.

கரோனா தொடங்கியபின் திருநெல்வேலி அல்வா கடையில் சமூக இடைவெளியைக் கடைபிடித்துதான் வியாபாரம் செய்யப்பட்டு வந்தாலும் எப்படியோ பிஜிலி சிங் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். இவரது தற்கொலைக்கு திருநெல்வேலியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.