இந்தியா

உச்சநீதிமன்றத்தில் 10, 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளும் நடைபெறாமல் இருந்துவந்தது. எனினும் ஆன்லைன் மூலமாக தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு நடத்தி வந்தன.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் 10,12ஆம் வகுப்பு தேர்வுகளை கொரோனா பரவும் அபாயம் கருதி ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பெற்றோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் அறிக்கையில் ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.