இந்தியா

ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை இந்தியாவின் பிரதானமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருவதையடுத்து பல மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்களான ரயில் சேவையும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புலப்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் சேவை மட்டும் தொடர்ந்து இயங்கிவருகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வரை நகர்ப்புற மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இக்காலக்கட்டத்திற்குள்  முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.