இந்தியா

கிழக்கு லடாக்கின் நிலைமை குறித்து பாதுகாப்பு தலைமை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே விளக்கமளித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு தலைமை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் வெற்றி நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பின் வியாழக்கிழமை ரஷ்யாவிலிருந்து திரும்பினார். இதனிடையே ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே அவர்களும் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் த்சோவில் சீனர்களுடன் மோதல்களில் ஈடுபட்ட சில இந்திய துருப்புக்களுக்கு பாராட்டு அட்டைகளை வழங்கினார். அப்பகுதிகளை பார்வையிட்ட பின்னர் டெல்லிக்கு திரும்பி வந்தார். அங்கு அவர் லடாக்கில் உள்ள நிலைமை குறித்து பாதுகாப்பு தலைமை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு விரிவாக விளக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்பாக கூறப்பட்ட வெளியுறவு அமைச்சகத்தின் தகவலில் தற்போதைய நிலைமையைத் தொடர்வது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவின் வளர்ச்சிக்கான சூழ்நிலையைத் தூண்டிவிடும் எனினும் இராணுவம் மற்றும் இராஜதந்திர தொடர்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும்போது இரு தரப்பினரும் இப்பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 மோதல் நடந்த இடத்தில் சீன கட்டமைப்புகளை வெளிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது  குறிப்பிடதக்கது. 

இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதல் கால்வானில் மே மாதம் முதல் வாரத்தில் இருந்தது என்பதையும் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. “மே மாத தொடக்கத்தில், கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவின் இயல்பான, பாரம்பரிய ரோந்து முறைக்குத் தடையாக சீனத் தரப்பு நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக இருதரப்பும் நேருக்கு நேர் மோதும் சந்தர்ப்பம் உருவானதாக கூறப்படுகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.