இந்தியா

இந்தியாவில் உயர்வடைந்து வரும் கொரோனா பாதிப்பில் இதுவரை 50,8953பேர் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். எனினும் 2.9 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,552 புதிய கொரோனா வழக்குகளை பதிவு செய்யப்பட்ட நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை எட்டியுள்ளன. கொரோனா நொய்த்தொற்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கை 5,08,953 ஆக உள்ளது.

இதில் சிகிச்சை பெற்று வருவோர் 197,387 ஆகவும் இறந்தோரின் எண்ணிக்கை 15,685ஆகவும் உள்ளது, எனினும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடி திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 29,5881 ஆக பதிவுசெய்யப்பட்டமையால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீட்பு விகிதம் 58.13 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் மராட்டி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 5024 பேர் கொரோனாவால் பாதிப்படைந்திருப்பதுடன் மொத்த எண்ணிக்கையாக 1,52,765 ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் நேற்று பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 3,460ஆக இருந்ததுடன் 77,240பேர் டெல்லியில் மொத்தம் கொரோனாவால் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் 3,645 பேராக நேற்று ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.