இந்தியா

இன்று ஆயிரக்கணக்கான பயிர் அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவின் ஹரியானா குருகிராமில் காணப்பட்டன. இதனால் அந்நகரமே இருள் சூழ்ந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்து, ஏராளாமான பயிர்களை அழித்து வருகின்றன. இத்தாக்குதலை எதிர்கொள்ள மத்திய அரசு 11 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமைத்துள்ளது.

இதன் தொடர்பாக விவசாயிகள் தங்கள் பூச்சிக்கொல்லி தெளிப்பதற்காக தயார் நிலையில் கருவிகளை வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர், இதனால் தேவைப்படும் போது அவற்றைப் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் கிராமங்களில் வெட்டுக்கிளிகள் குறித்து விழிப்புணர்வைப் பரப்புமாறு விவசாயத் துறை ஊழியர்களை நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஹரியானாவின் குருகிராம் எனும் நகருக்குள் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. முன்கூட்டியே நகர நிர்வாகம் ஆலோசனைகளை வெளியிட்டது. அதன்படி மக்கள் தங்கள் ஜன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும் என்றும் தகரப் பெட்டிகள், பாத்திரங்கள் ஆகியவற்றைக் கட்டிக்கொண்டு சத்தம் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது, இதனால் வெட்டுக்கிளிகள் ஒரு இடத்தில் குடியேற முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து படையெடுத்த வெட்டுக்கிளிகளால் அந்நகரமே இருள் சூழ்ந்தவாறு காணப்பட்டதுடன் பல குடியிருப்பாளர்கள் பூச்சிகளைத் தடுப்பதற்காக பாத்திரங்களை அடிப்பதன் மூலம் சத்தங்களை எழுப்பி விரட்டினர்.

வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்காவில் திரளாக உருவாகி ஈரான், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு பறக்கின்றன. அவைகளுக்கு அபரிமிதமான பசி இருப்பதாக அறியப்படுகிறது. பயிர் தாவரங்களை அவை உண்ணத்தொடங்குவதால் சில நாட்களிலே பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களில் மிக மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பு இது என்றும் ஏற்கனவே பருவகால பயிர்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு மாத கால நாடளாவிய கொரோனா வைரஸ் ஊரடங்கு தாக்கத்துடன் போராடும் இந்திய விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.