இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி; அரசாங்கம் ஒருபோதும் இனம், மதம் குறித்து எந்த பாகுபாடும் காட்டுவதில்லை என தெரிவித்துள்ளார்.

நேற்று கேரள மாநிலம் பத்தனம்திட்டா பாதிரியார் ஜோசப் மார் தோமாவின் 90-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது அவர் இந்திய அரசாங்கம் இனம், மதம், பேதம், மொழி என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டுவது இல்லை. நமக்கேல்லாம் ஓர் வழிகாட்டும் ஒளியாக இந்திய அரசியல் சாசனம் உள்ளது. 130 கோடி மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கவே அரசு செயலாற்றி வருகிறது எனக்கூறினார்.

இதன்போது மக்கள் உள்நாட்டு உற்பத்திபொருட்களையே கொள்ளனவு செய்வது குறித்தும் பேசினார். இன்று மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களையே வாங்கவேண்டும் என கூறுவது பலரது வீடுகளில் இது ஒளியேற்ற உதவும் எனத் தெரிவித்தார்.

மேலும் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலைமை பிற நாடுகளை விட குறைவாகவே உள்ளது. நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் அதிகரித்து உள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்தோடு மக்கள் கொரோனாவிலிருந்து தம்மை பாதுகாத்துகொள்ள தடுப்பு நடவடிக்கைகளை கைவிடாது தொடர்ந்து முன்னெடுக்குமாறும் கூறியுள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.