இந்தியா

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட போது சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணையை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை - மகனை விசாரணைக்காக போலீசரால் கைது செய்யப்பட்டனர். அங்கு கோவில் பட்டி கிளைச்சிறையில் இருவரும் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அவர்களது உயிரிழப்புக்கு போலீசாரே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கிளை சிறையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி அடங்கிய குழு ஆவணங்கள், பதிவுகளை சேகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாவட்ட நீதிபதி பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.