இந்தியா

ஜூலை 5 வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை ஆகிய ஐந்து சிவப்பு மாவட்டங்களில் தற்போதைய தீவிர கட்டுப்பாடுகள் கொண்ட நிலை தொடர்ந்து வரும் நிலையில் ஜூலை 31வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6 முதல் இந்த தீவிர கட்டுப்பாடுகள் கொண்ட முடக்கம் பிறப்பிக்கப்படுவதற்கு முந்தைய நிலை அதாவது ஜூன் 19க்கு முந்தைய நிலை மீட்கப்படும். அதாவது அதிக தளர்வுகள் கிடைக்கும் என தமிழக அரசு தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்பட்டு வந்திருந்தன.

அதேபோல மற்ற மாவட்டங்களில் ஜூன்-1இலிருந்து நடைமுறைபடுத்தப்பட்ட தளர்வுகள் தொடரும் எனவும் (மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை உள்ளிட்ட சில புதிய கட்டுப்பாடுகள் தவிர) ஜூலை 5, 12, 19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த தளர்வு இல்லாத முழு முடக்கம் தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அதே நேரம், கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோயில்கள், மசூதிகள் தேவாலயங்களில் பக்தர்களை முகக் கவசங்களுடன் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதனிடையே ஜூலை முதல் வாரத்தின் முடிவில் தொடங்கி 12 நாட்களுக்கு மீண்டும் முழு முடக்கம் கொண்டு வரலாமா என்பதையும் தமிழக அரசு பரிசீலினை செய்து வந்தது. தொடர்ந்து ஜூலை மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

  

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்திய மத்திய அரசு அறிவித்தலின் படி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தமிழக செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா உள்பட சிலருக்கு புதிய நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.