இந்தியா

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் லடாக்கில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து சீனாவிற்கு எதிரான நிலைபாட்டினை இந்தியா எடுத்து வருகிறது.

உலக நாடுகள் பலவும் சீனாவுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றத் தொடங்கியிருப்பதால் சீனா பெரும் பொருளாதார பின்னடைவுக்கு செல்லும் என்று உலக வர்த்தக அமைப்பு கணித்து வருகிறது. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் முடிவுகளில் ஒரு பகுதியாக, இந்தியாவில் மிகவும் பிரபலமான டிக் டோக், வெச்சாட் மற்றும் யு.சி. தேடுபொறி உள்ளிட்ட சீன இணைப்புகளைக் கொண்ட 59 செயலிப் பயன்பாடுகளையும் இந்திய அரசு தடை செய்துள்ளது. இந்த சீன செயலிகளின் பயன்பாடுகள், பயனர்களாகிய இந்த மக்களின் தகவல் உரிமை விதிமுறைகளை மீறுவதாகவும், பயனர்களின் ‘பிரைவசி’ எனும் தனியுரிமைப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவதாகவும் இன்று மாலை வெளியான இந்திய அரசின் தடை செய்யும் பத்திரிகை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்த செயலிகளில் ஸ்பைவேர் எனப்படும் உளவு பார்க்கும் நிரல்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இந்திய உளவுத்துறை நிறுவனங்கள் இவற்றை ஆய்ந்து மத்திய அரசுக்கு இந்த 59 செயலிகளின் பட்டியலை அளித்ததாக மத்திய அரசு தகவல் ஒளிப்பரப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தடை அமலுக்கு வந்த சில நிமிடங்களில், 1.1 மில்லியன் இந்தியப் பயனாளிகளைக் கொண்ட டிக்டோக் கணக்குகள் இந்தியாவில் முழுவதுமாக முடக்கப்பட்டன.

பிரதமரின் முன்னறிவிப்பு

இந்தத் தடை இருக்கும் என்பதை சற்று முன்னதாக ஆத்மா நிர்பர் பாரத் வானொலி உரையின் வழியாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அவர் தனது உரையில் “ சீனாவுக்கு இந்தியா ஒரு பொருத்தமான பதிலடியை அளிக்கும்” என்று கூறிய ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனப் பொருட்களைப் புறக்கணிக்க நாடு தழுவிய அளவில் மக்களுக்கு அழைப்பு விடுத்த அவர், “நாங்கள் உள்ளூர் பொருட்களையே வாங்குவோம், உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்போம், இது இந்தியா வலுவாக இருக்க உதவும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இன்று மாலை வெளியான நடுவன் அரசின் அறிக்கையில், “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தகவல் திருட்டை தடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்தச் செயலிப் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.