இந்தியா

கொரானாவின் கோரத் தாண்டவம் சென்னையை ‘உண்டு .. இல்லை எனச் செய்து வருகிறது. அதில் ஒரு துயரச் சம்பவம் அனைவரது மனதை உலுக்குவதாக உள்ளது. மூளை வளர்ச்சி குன்றிய மகனை தவிக்கவிட்டு, தாய்- தந்தையரை அள்ளிச் சென்றது கொரோனா.

இது தொடர்பில் அறியவருவதாவது; சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கே. வி. பி கார்டனில் வசித்து வந்தவர் ஏ. கே. அருணாச்சலம் (வயது 62). இவருடைய மனைவி பெயர் கீதா (வயது 58) இவர்கள் ஒரே மகன் மணி (வயது 26) மூளை வளர்ச்சி குன்றியவர். சென்னையில் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கே. வி. பி. கார்டனும் அடங்கும். கடந்த சில வாரங்களாக இப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரான புலவர் அருணாச்சலம் கண் பார்வை குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளி. ஆனால் தம் அறிவுக் கூர்மையால் நிர்வாக ஆற்றலால் அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநிலத் தலைவராக(STATE PRESIDENT, ALL INDIA BLIND PROGRESSIVE ASSOCIATION) பணியாற்றி வந்தார். இந்த ஊரடங்கு காலத்தில் கூட பார்வையற்றவர்கள் உணவுக்கு தவித்துக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்தால் தம் வயதைப் பொருட்படுத்தாமல் அங்கு போய் உதவி வந்தார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இவரைத் தொடர்ந்து இவர் மனைவி கீதா மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய மகன் மணி ஆகியோரும் தொற்றுக்கு ஆளாயினர். மூவரும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனின்றி மனைவி கீதா நேற்று முன்தின இரவும் புலவர் அருணாச்சலம் நேற்று காலையிலும் பலியாயினர்.

மூளை வளர்ச்சி குன்றிய மணி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். சுயமாக இயங்க இயலாத வாலிப மகனை பெற்றோர் இருவரும் கண்ணை இமை காப்பதுபோல் காப்பாற்றி வந்தனர். கொடிய கொரோனா இவரை தவிக்கவிட்டு தாய் - தந்தையரை அள்ளிச் சென்றுவிட்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.