இந்தியா

என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 6பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு இங்குள்ள சுரங்க நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுவருகிறது. இங்குள்ள இரண்டாம் அனல் மின்நிலையத்தில் இன்று அதன் பாய்லர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்காரணமாக 6 பேர் உயிரிழந்தும் 17பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தொழிலாளர்கள் மீண்டும் பணிகள் தொடங்கிய நிலையில் இரண்டாவது முறையாக இந்த வெடிப்புச் சம்பவம் நடந்ததாகவும் ஏற்கனவே கடந்த மே மாதம் இதேபோன்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்திருந்ததும் குறிப்பிடதக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.