இந்தியா

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

18 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் இறந்துள்ளனர். தேசம் முழுவதும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிப்பதில் இந்தியாவில் பல முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையமும் இணைந்து ‘கோவாக்ஸின்’ (COVAXIN) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளன. முழுவதும் இந்தியத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்தான இதனை அடுத்தகட்ட ஆய்வுக்காக மனிதச் சோதனை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியிருகிறது.

இந்தியாவில் எபோலா வைரஸ், ஸிகா வைரஸ் (Zika) ஆகியவற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த பாரத் பயோடெக் நிறுவனத்திடம் ஜூலை மாதம் முதல் மருந்தைச் செலுத்தி ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.