இந்தியா

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் எனுன் வியாபாரிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன்தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவத்துடன் தொடர்புடைய 6 போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவ்வழக்கில் அப்ரூவராக மாறிய தலைமை காவலர் ரேவதி என்ற பெண் அளித்த சாட்சியத்தை அடுத்து இவ் வழக்கில் பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளதோடு உண்மையை வெளியிட்ட அவருக்கு உரிய பாதுகாப்பும், வேலைக்கான சம்பளமும் வழங்க வேண்டும் என மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் காவல் அதிகாரிகளின் மன அழுத்தத்தினால் இச்சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என கருதுவதாகவும் காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே மதுரைக்கிளை உயிர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இவ் வழக்கு தொடர்பான விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.