இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்திய - சீனா இடையில் நடைபெற்றுவரும் எல்லைப்பகுதிக்கு விஜயம் செய்திருப்பதாகவும் இந்த திடிர் ஆய்வு உலக கவனம் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் கல்வானில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அங்கே பதற்றம் அதிகரித்தது. தொடர்ந்து அங்கு இந்தியாவும் சீனாவும் தமது படைகளை குவித்துவந்தன. இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேர்ச்சுவார்த்தையின் பின் இரு நாடுகளும் தமது படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புதல் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி மோதல் இடம்பெற்ற லடாக் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதாகவும் அவருடன் இந்திய தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன்சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்த இராணுவத்தினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த எல்லைப்பகுதி ஆய்வுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்