பாஜகவின் தமிழக செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா உள்பட சிலருக்கு புதிய நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் கட்சியில் நிரிவாகிகளை மாற்றி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி
திமுகவில் இருந்து பா. ஜனதாவுக்கு மாறிய துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்துள்ளார். தமிழக பாஜக துணைத்தலைவராக வானதி சீனிவாசன் நியமித்துள்ளார்.
இது தவிர நடிகை நமீதா பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் நடிகைகள் மதுவந்தி அருண், கௌதமி, குட்டி பத்மினி ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்