இந்தியா

இந்திய மத்திய அரசு அறிவித்தலின் படி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக முக்கிய கல்விப்பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான ஜே.இ.இ , நீட் நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பெற்றோர்கள் சார்பில் கோரப்பட்டிருந்தது. இதனையடுத்து இத்தேர்வுகளை நடத்துவது குறித்து தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து அறிக்கை ஒன்றும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாகவும் ஜே.இ.இ முதன்மை தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெறுமென அறிவித்துள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.