இந்தியா

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

சீனா-இந்தியா எல்லைப்பிரச்சனை நிலவி வரும் நிலையில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு முழுமையான தடை அமலில் இருக்கும் என்று இந்திய மின்வாரிய அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறிய அவர் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதன இறக்குமதி அனுமதிக்கப்படமாட்டாது என்றும் சீன நிறுவனங்களிடமிருந்து மாநில மின் விநியோக நிறுவனங்கள் பொருள்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகளை வழங்கவேண்டாம் என்றும் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட ரூ 21,000 கோடி மதிப்பிலான மின்சாதனங்கள் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் நமக்கு தேவையான மின்சாதனங்களை உள்நாட்டிலேயே தயாரித்து அதனையே கொள்முதல் செய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.