இந்தியா

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய உச்சகட்ட நிலையாக இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 22,772பேராக பதிவாகியுள்ளது இதனால் மொத்தம் 6 லட்சத்து 48 ஆயிரத்து 315 ஆக கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 442ஆக பதிவாகி மொத்தம் 18,655 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2,35,433 பேராகவும் குணமடைந்து வீடு திரும்பியோர் 3,94,227 பேராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க ‘கோவேக்சின்’ என்று அழைக்கப்படுகின்ற இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாராகி உள்ள நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் திகதியிலிருந்து பொதுமக்களுக்கு போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள இடங்களில் பரிசோதனைக்கு ஏற்பாடாகி வருவதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசி என்பது குறிப்பிடதக்கது.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.