இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் நிலவரம் படி நேற்றைய தினம் 24 ஆயிரத்து 850 பேர் பாதிப்படைந்திருப்பதாக ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்டது. இந்தியாவின் அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களான மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகியவை மட்டுமே 78 சதவீத கொரோனா பாதிப்பை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மராட்டிய மாநிலத்தில் 7,074பேர் கொரோனா நோய்த்தொற்றாளார்களாக நேற்றைய தினம் பதிவானது. இதனையடுத்து அங்கு மொத்தம் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக உள்ளது. இதனால் கொரோனாவின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் ரஷியாவை முந்தி மூன்றாம் இடத்திற்கு இந்தியா வந்துள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு அடித்தபடியாக இந்தியா 6.9 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்