இந்தியா

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் 15ஆம் திகதி கிழக்கு லடாக் எல்லை; கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படையினர் அத்துமீறி நுழைந்ததால் அங்கு இந்தியவீரர்களுக்கும் சீன வீரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்யதவேளை 45 சீன வீரர்களும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இரு தரப்பினரும் தற்காலிக கட்டுமானங்கள், கூடாரங்கள் அமைத்து அடுத்தகட்ட நிலைக்கு தயாராகி நின்றன. இதனால் பெரும் பதற்றம் நிலவியதுடன் இரு தரப்பு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். அதில் இரு தரப்பும் மோதல் போக்கை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டன.

இந்நிலையில் முதற்கட்டமாக மோதல் உருவான இடங்களிலிருந்து மோதல் போக்கை விலக்கிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சீன வீரர்கள் கல்வானில் மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும், கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்களை இரு தரப்பினரும் அகற்றியுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.