இந்தியா

9 முதல் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை 30 சதவீதம் குறைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.

இது குறித்து பரிந்துரைகள் கேட்கப்பட்ட பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோ நோய்த்தொற்றின் தாக்கத்தால் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. இன்னமும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் முக்கிய பரீட்சைகள் சில ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை திருத்தி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டங்களின் சுமையை குறைக்க அறிவுறுத்தப்பட்டதாக மனித வள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகையால் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 30 வீதம் குறைக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் குறைக்கப்பட்ட பாடத்தலைப்புகள் வெவ்வேறு பாடதலைப்புகளை இணைக்கத் தேவையான அளவிற்கு மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்படுவதை பள்ளி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உறுதிப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.