இந்தியா

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

 சாத்தான்குளத்தின் தந்தை-மகன் காவல்நிலைய உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சிலருக்கும் இச்சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கடும் விமர்சனத்தை பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு சந்தித்துள்ளது.

மேலும் இந்த அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இதன் தொடர்பாக சாத்தான்குளம் சம்பவத்துடன் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பினருக்கு இருக்கும் தொடர்பு விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.