இந்தியா

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பால் மராட்டிய மாநிலத்தை அடுத்து தமிழ்நாட்டில் அதிக பாதிப்பை கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி ஆனது.

நேற்று தமிழகத்தில் புதிதாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,680ஆக பதிவானது. இதனால் 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 பேர் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையாக உள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,205 பேராகவும் இதனால் சென்னை நகரில் கொரோனா பாதிப்புள்ளானோர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த சில அமைச்சர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுவருகிறது.

அண்மையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரம் அவரின் மனைவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ, அடிக்கடி மனைவியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனை சென்று வந்தமையால் கொரோனா நோய்த்தொற்றிற்கு ஆளானதாக தெரிவிக்க்ப்படுகிறது.

முன்னதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான அமைச்சர்களில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு கடந்த மாதம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது குறிப்பிடதக்கது.

இது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்ததையடுத்து "கோவிட் 19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும். எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்து இருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்“ என தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.