இந்தியாவின் பொருளாத பாதிப்பு கொரோனா நோய்த்தொற்று நேருக்கடியால் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக ரிசர்வு வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 100 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. எனினும் தற்போது படிப்படியாக தளர்வுகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியிம் பொருளாதார மாநாடு டெல்லியில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறுகையில் சுகாதாரம், பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு எதிர்மறையான மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். நமது பொருளாதாரதரமும் நிதி அமைப்பும் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை சந்தித்துள்ளன. என்றார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்
"ரிசர்வ் வங்கி நிதி ஸ்திரத்தன்மையை பராமரிக்க பாடுபடுகிறது. நாணய, நிதி, ஒழுங்குமுறை ஆகியவை வளர்ச்சிக்கு உதவுகின்றன. விநியோகச் சங்கிலி எப்போது முழுமையாக மீட்டமைக்கப்படும் என்பது எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இந்திய பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளது, ”என்றார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்