இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் உயர்வடைந்து வருவதால் ஊரடங்கு சட்டத்தை பல பகுதிகளில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான தகவலின் படி நாட்டில் சில தினங்களாக உயர்வடைந்துவரும் கொரோனா நோய் தொற்றினால் மதுரை உள்ளிட்ட முக்கிய பெரு நகரங்களின் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் வரும் ஜூலை 14 திகதி வரை முழு பொது முடக்கமாக நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,077 ஆக உள்ளது.

இதனையடுத்து பெங்களூருவிலும் கொரோனா பரவலை தடுக்க ஜூலை 14 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகரின் புறநகர் பகுதிகளிலும் ஜூலை 14ஆம் திகதி முதல் இரவு 8 மணி முதல் ஜூலை 22ஆம் திகதி அதிகாலை 8 மணி வரை அத்தியாவசிய தேவை தவிர பொதுமக்களை வெளியே நடமாடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உத்தர பிரதேசத்தில் சிறிய அளவிலான ஊரடங்கு வாரத்தின் 2 நாட்களில் மட்டும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதனையடுத்து மும்பை பெருநகருக்கு அடுத்தபடியாக உள்ள தானே மாவட்டத்தில் வருகிற 19ஆம் திகது வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 152 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,560ஆக பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தானே மாவட்டத்தின் உல்லாஸ்நகர் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மகாராஷ்டிர மாநிலம் நாந்தேன் மாவட்டத்திலும் கொரோனா நிலவரம் குறித்து அறிவதற்காக வருகிற ஜூலை 20 ஆம் திகதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நேற்றுவரை 1,510பேர் வரை கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். உயர்வடைந்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விருத்தாச்சலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் வருகிற 31ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.