பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரும், இந்தித் திரையுலகப் பிரபலமும், மூத்த நடிகருமான அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாஸிட்டிவ் நேற்று உறுதி செய்யப்பட்டது தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இது உலகம் முழுதும் இருக்கும் அவரது கோடிக் கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை நானாவதி மருத்துவ மனையில் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களும் அபிஷேக் பச்சனும் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் அமிதாப்பின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப் பட்டன. இதுகுறித்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் லேசான அறிகுறிகளுடன் அமிதாப்பச்சனும், அபிஷேக் பச்சனும் உடல் நிலையில் சீராக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யா ராய்க்கும் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமிதாப் பச்சன் அவர்கள் தனது கொரோனா பாதிப்புக் குறித்து டுவிட்டரில் அளித்த செய்தியில், கடந்த 10 நாட்களில் தனக்கு நெருக்கமாக இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர்கள் குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டும் என திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் வேண்டி கொண்டுள்ளனர்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்