இந்தியா

மத்திய பிரதேசத்தை பாஜகவிடம் இழந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் முகாமிட்டுள்ள சச்சின் பைலட், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்திக்க வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே முதல் மந்திரி பதவியை பெறுவதற்கு போட்டி நிலவியது. அதன் பின்னதாக கட்சி மேலிடம் முதல் மந்திரி பதவியை அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கு துணை முதல்-மந்திரி பதவியும் வழங்கியது. எனினும் இருவரின் மோதல் போக்கு தொடர்ந்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து போலீசார் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் இந்த விவகாரத்தால் சச்சின் பைலட் பகிரங்கமாக மோதலை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க இன்று நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்த சச்சின் பைலட் தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்,ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக வாட்ஸப் மூலம் அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக டெல்லி சென்றிருந்த சச்சின் பைலட்டை சோனியா காந்தி ராகுல்காந்தி சந்திக்கவில்லை எனவும் உடனேயே அவர் ராஜஸ்தான் திரும்பியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ராஜஸ்தான் அரசில் ஏற்பட்டுள்ள இந்த முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையேயான அதிகார மோதல் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியாவுக்குப் பிறகு வெளியேறும் அடுத்த நபர் சச்சின் பைலட் ஆக இருக்கலாம என அறிகுறிகள் தென்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது குறித்து டுவிட்டரின் கருத்து தெரிவித்துள்ள காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்தவரும், சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியா ராஜஸ்தான் துணை முதல் மந்திரி சச்சின் பைலட், முதல் மந்திரி அசோக் கெலாட்டால் ஓரங்கட்டப்பட்டு, உள்ளார். என்னைப்போல எனது சகாவும் துன்பப்படுவதை பார்க்க வருத்தமாக உள்ளது. காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை, என தெரிவித்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.