இந்தியா

இந்தியாவின் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தசமயம் ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளும் மூடப்பட்டு பக்கதர்கள் செல்ல தடை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுவாமிக்கு தினமும் நடைபெறும் பூசை ஆராதனைகள் வழக்கம்போல ஆலயத்தினுள்ளே நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பல்வேறு நிபந்தனைகளுடன் நாடு முழுவதும் ஆலயங்கள் திறக்க அனுமதி அளித்திருந்ததையடுத்து 83 நாட்களுக்குப் பின் திருப்பதி ஆலயம் சுவாமி தரிசனத்திற்கு பக்கதர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகரும் ஆகம ஆலோசகரான ரமன தீக்சிதுலு தமது டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார். ஆலயத்தின் 50 அர்ச்சகர்களில் 15 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சாமி தரிசனத்தை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.