இந்தியா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெரிந்தொற்றினைத் தடுத்து நிறுத்த இங்கிலாந்து நாட்டு அரசும் அங்குள்ள முன்னணி மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனெகா உதவியுடன் தடுப்பூசி (ChAdOx1) ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட கிளினிக்கல் ட்ரையல் பரிசோதனை வெற்றி அடைந்துள்ளதாக ஆஸ்ட்ராஜெனெகா அறிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும். மேலும் இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி டோஸ் மருந்துகளை வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த தடுப்பூசியின் விலை சாமானிய மக்களும் வாங்குவதற்கு ஏற்ற வகையில் 1000 ரூபாய்க்குள் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறியதாவது: “இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூச்சியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும். அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி டோஸ்கள் கிடைக்கும். 200 மில்லியன் டாலர்களை இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் நிறுவனத்தின் மீது முதலீடு செய்துள்ளது. இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்த நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரசுகளை அழித்து உள்ளது, மீதமுள்ள கட்டங்களில் மருத்துவ பரிசோதனைகள் நல்ல பலன்களைப் பெறாவிட்டால், தடுப்பூசியை மனிதர்கள் பயன்படுத்த இயலாது. எனவே ஆகஸ்டில் இந்தியாவில் 3-ஆம் கட்ட சோதனைகளுக்குச் செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது முடிவடைய இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று சொன்னால் உற்பத்தியை தொடங்குவோம். வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இந்த தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை செய்ய உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். கோவேக்ஸின் மருந்தினை அடுத்து இதுவும் இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.