இந்தியா

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதும் இப்போது எந்த நடவடிக்கையும் சபாநாயகரால் எடுக்க முடியாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசியலில் முறுகல் நிலையாக மாறியுள்ள முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகிய இருவருக்குமான பிளவில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் தனியே முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் சச்சின் பைலட்டையும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 19பேரையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.

இதனையடுத்து சச்சின் பைலட் தரப்பினர் சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரனை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க வழக்கில் எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கமுடியாது என்று தீர்பளித்துள்ளது.

தகுதிநீக்க அறிவிப்புகளுக்கு எதிரான சச்சின் பைலட் தரப்பினர் சமர்ப்பித்திருந்த மனு மீதான முடிவு வரும் வரை தற்போதைய நிலையே தொடரவேண்டும் என கூறியுள்ளது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.