இந்தியா

திருப்பதி ஏழுமலையான் ஆலய அர்ச்சகர்கள் 16 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் 17 அர்ச்சகர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். அத்தோடு ஆலத்தை சேர்ந்த ஊழியர்கள் 170 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் முதல் முறையாக திருப்பதி ஆலய அர்ச்சகர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைதொடர்ந்து ஆலய தரிசனத்திற்கான பற்றுசீட்டு விநியோகம் நிறுத்தப்பட்டு ஆன்லைனில் மட்டுமே தரிசன பற்றுசீட்டு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதித்த 16 திருப்பதி ஏழுமலையான் ஆலய அர்ச்சகர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தசமயம் ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளும் மூடப்பட்டு பக்கதர்கள் செல்ல தடை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுவாமிக்கு தினமும் நடைபெறும் பூசை ஆராதனைகள் வழக்கம்போல ஆலயத்தினுள்ளே நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பல்வேறு நிபந்தனைகளுடன் நாடு முழுவதும் ஆலயங்கள் திறக்க அனுமதி அளித்திருந்ததையடுத்து 83 நாட்களுக்குப் பின் திருப்பதி ஆலயம் சுவாமி தரிசனத்திற்கு பக்கதர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.