இந்தியா

பீகார் கிழக்கு சம்பரன் மாவட்டத்தின் சங்கிராம்பூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கந்தக் நதி கடும் மழை காரணமாக பெருக்கெடுத்தது இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கடந்த சில நாட்களாக இந்தியாவின் வடபகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், டெல்லி, அசாம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது மக்களின் கொரோனா நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இந்நிலையில் தொடர் கனமழையால் பீகாரில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 7.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆற்று நீர் மாநில நெடுஞ்சாலைகள் பல வீடுகள் வசிப்பிடங்களை நீரில் மூழ்கடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் பாதுகாப்பு மீட்பு படையினரின் முயற்சியில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு குழுவினர் தீவிரமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர்.

பீகாரின் ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்றால் 33,511 பேர் இதுவரை பாதிப்படைந்துள்ளதுடன் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.