இந்தியா

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில்‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரி பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது.

பல இனம், பல மொழி, நூற்றுக் கணக்கான பழங்குடிகள், ஆதிவாசிகள் என பன்முகத் தன்மைகொண்ட ஜனநாயக நாடாக இருந்து வருகிறது இந்தியா.அதன் அரசியலைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட ‘மதச்சார்பின்மை’யால்தான் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது. அப்படிப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட முகவுரையிலிருந்து ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’ ஆகிய இரு வார்தத்கைளை நீக்க வேண்டும். எனவும் இந்த இரு வார்த்தைகளும் 42-வது திருத்தத்தின்மூலம் சேர்க்கப்பட்டவை என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜகாவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் விஷ்னு சங்கர் ஜெயின்,பல்ராம் சிங், கருனேஷ் குமார் சுக்லா, பிரவேஷ் குமார் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுவில் கூறியிருப்பவாது: “கடந்த 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் 42-வது திருத்தத்தின்படி அதில் சோசலிஸ்ட், மதச்சார்பின்மை ஆகிய இரு வார்த்தைகள் இணைக்கப்பட்டன. இது அரசியலமைப்பு கொள்கைகளுக்கும் இந்தியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார கருப்பொருளுக்கும் முரணானது. அரசியலமைப்புச்சட்டம் 19(1)(ஏ)பிரில் இருக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், மற்றும் பிரிவு 25-ல் இருக்கும் மதச் சுதந்திரம் ஆகியவற்றின் உரிமைகளை மீறுவதாகும். மிகப்பெரிய குடியரசான பாரதத்தின் கலாச்சார, வரலாற்று கருப்பொருளுக்கு எதிரானதாக இந்தத் திருத்தம் இருக்கிறது. உலகின் பழைமையான நாகரீகத்தைக் கொண்டுள்ள நம்நாட்டில் மதம் குறித்த கருத்தாக்கத்திலிருந்து வேறுபட்டு தர்மம் குறித்த தெளிவான கருத்தாக்கம் இருக்கிறது. இந்தியச் சூழலுக்கு கம்யூனிச கோட்பாட்டை பயன்படுத்த முடியாது, பொருந்தாது. இது இந்தியாவின் மத உணர்வுகள் மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளுடன் ஒத்துப்போகவில்லை.

ஆதலால், 1976-ம் ஆண்டில் அரசியலமைப்புச்சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட சோசலிஸ்ட், மதச்சார்பின்மை ஆகிய இரு வார்த்தைகளையும் நீக்க உத்தரவிட வேண்டும். சோசலிஸ்ட், மதச்சார்பின்மை ஆகிய இரு வார்த்தைகள் இந்தியக் குடியரை அதன் இறையான்மைக்கு செயல்பாட்டில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இந்த வார்த்தைகள் குடிமக்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ, சமூக அமைப்புகளுக்கோ பொருந்தாது. மேலும், மக்கள்பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 29(ஏ)(5)ஆகியவற்றில் ஒரு அரசியல் கட்சி தங்களை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்போது இந்த இரு வார்த்தைகளையும் கண்டிப்பாகக் குறிப்பிடுதலையும் எதிர்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர். இந்த மனு இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இன்னும் அறிவிக்கவில்லை.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.