இந்தியா

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

  கொரோனா நோய்ப்பரவல் அதிகரித்துவரும் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுவரை 5  முறை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரெயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும், இ-பாஸ் நடைமுறையும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்,

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.