இந்தியா

தமிழகம் என்றில்லை; இந்தியா முழுவதுமே கொரோனா நோயாளி இறந்ததும் அவரது உடலை மூடி சீல் வைத்து நெருங்கிய ரத்த உறவுகளை கூட பார்க்க விடாமல் குழிக்குள் போட்டு மூடி விடும் நிலை காணப்படுகிறது.

உண்மையில் கோரானாவால் பாதித்தவர் தும்மாமல் இருமால் கிருமி வெளியே வருவதில்லை என மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்திருக்கும் நிலையில் இறந்த உடல்களைத் தொடுவதன் வழியாக கிருமி பராவாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏன் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது இல்லை என்ற கேள்வியை மக்கள் தமிழ்நாட்டில் தற்போது கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் உறுப்புத் திருட்டுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இவ்வாறு செய்கின்றவனவா? என்று கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

இறந்தவர் உடலை யாரும் பார்த்து விடாதவாறு பிளாஸ்டிக் பை கொண்டு மூடி இறுக்க கட்டி குழிக்குள் போட்டு விடுவதும், எரியூட்டுவதுமாய் கடந்து போன சடலங்களில் எத்தனை உறுப்புகள் திருடப்பட்டிருக்குமோ என்னும் மக்களின் ஐயம் நியாமானது தான் என்றாலும், தற்போதைக்கு கொரோனாவால் இறந்தவர்கள் உடலை ஆல்ஹஹால் கொண்டு டி-வைரஸ் செய்வதால், உடலில் சாராய நெடி பெரிய அளவில் இருக்கும் என்றும். அது பலருக்கு ஒவ்வாமையை உருவாக்கலாம் என்றும் அதனால்தான் உடலைத் தருவதில்லை என்றும் அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.