இந்தியா

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரத்தில் உள்ள சரயு நதிக்கரையில் ராமர் கோவில் கட்டப்படும் தொடக்க விழாவை இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. ராமர் கோவில் பற்றிய பல ஆச்சர்யத் தகவல்களை வாசகர்களுக்குப் பகிர்கிறோம்.

வட இந்தியாவில் கோவில்களை கற்களைக் கொண்டு அடுக்குதல் முறைப்படி கட்டுவதற்காக உருவான கட்டிக்கலை பாணியே நகரா. வட இந்தியாவில் மட்டுமே பிரபலமாக இருக்கும் இந்தக் கட்டிடக் கலை பாணியின் வயது ஆயிரம் ஆண்டுகள். ஆனால், தென்னிந்தியாவுக்குள் ஊடுருவவில்லை. இந்த நகரா கட்டிடக் கலை பாணியில்தான் ராமர்கோவில் கட்டப்பட உள்ளது. இதில் 10 ஏக்கரில் கோயிலும், மீதமுள்ள 57 ஏக்கர் கோவில் வளாகமாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 161 அடி உயரம், மூன்றடுக்கு, 5 மண்டபங்கள், ஒரு கோபுரத்தை கொண்டதாக இக்கோயில் வடிவமைக்கப்பட உள்ளது. கோவிலில் அமையவுள்ள மொத்த தூண்களின் எண்ணிக்கை 360.

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமருக்கு கோவில் கட்டப்பட உள்ளது. பிரபல கட்டட கலை நிபுணரான சந்திரகாந்த்பாய் சோம்புரா தான், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணியின் தலைமை கட்டட கலைஞராக செயல்படவுள்ளார். ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் மலைக்கற்களை தவிர, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள 2 லட்சம் கற்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவுள்ள ராமர் கோவிலை முழுவதுமாக கட்டி முடிக்க குறைந்தப்பட்சம் மூன்றரை ஆண்டுகள் ஆகுமென இந்தக் கட்டுமான திட்டத்தின் தலைமை கட்டட கலைஞரான சந்திரகாந்த்பாய் சோம்புராவின் மகன் ஆசிஷ் சோம்புரா தெரிவித்துள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.