இந்தியா

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் லெபனான் நாட்டு பெய்ரூட் துறைமுகத்தில் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரரேட் வெடித்து அதி பயங்கர வெடிவிபத்தாக பதிவானது. இதனையடுத்து சென்னை துறைமுகத்தின் அருகாமையில் 5 ஆண்டுகளாக 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து கிடங்கு ஒன்றில் சேமிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து குறித்து அதிர்ச்சியாக உள்ளது, உடனடியாக பாதுக்காப்பான முறையில் சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை அப்புறப்படுத்தி வேறு தேவைகளுக்கு உபயோகமாக்க வேண்டும் எனவும் லெபனான் நாட்டில் அமோனியம் நைட்ரேட்டால் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து போன்று சென்னையிலும் வெடிவிபத்து ஏற்படும் ஆபத்தை தடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.