இந்தியா

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

இதந்தொடர்பாக கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் வந்தே பாரத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக துபாயில் இருந்து IX1344 எனும் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது. இவ்விமானம் நேற்றிரவு 7.40 மணியளவில் கேரளாவின் கோழிக்கூடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க தொடங்கியது.

அவ்வேளை எதிர்பாராவிதமாக விமான ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு வேகமாக சென்றது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்தது. விழுந்த வேகத்தில் இரண்டு துண்டாக விமானம் உடைந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் குழந்தைகள் உட்பட 191 பயணிகள் இருந்துள்ளனர். இதில் பைலட் உட்பட இதுவரை 19பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவிக்கையில் : விமான ஓடுதள பாதையின் முடிவு பகுதி வரை இந்த விமானத்தை ஓட்டி செல்ல விமானி முயற்சித்திருக்கலாம். ஆனால் பருவ மழை பொழிவால் ஓடுதள பாதையில் சறுக்கல் ஏற்பட்டு விமானம் பாதையை விட்டு விலகி சென்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும் விமானம் தீப்பிடித்திருந்தால் மிட்பு பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 9 வருடங்களுக்கு முன்பே இந்த கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது என எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசக குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கூறுகையில் :

விமான ஓடுதளத்தின் முடிவு பகுதியில் 250 மீட்டர் அளவுக்கு காலியிடம் இருக்கவேண்டும் என்றும் அவ்வாறான போதிய இடவசதி இங்கே அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் இந்த விமான நிலைய ஓடுதளம் சரிவு பகுதியை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையம் குறித்து மங்களூர் விமான விபத்து நடந்தபின்பே தான் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் ஆனால் அதனை உரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக விமான ஓடுதள முடிவில் பாதுகாப்பு பகுதிக்காக 240 மீட்டர் அளவுக்கு காலி இடம் விட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.