இந்தியா

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய மருத்துவமனைகள் இல்லாத சூழலால் ஆந்திர பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கிருக்கும் ஓட்டல்கள் சில சிகிச்சை மையங்களாக மாற்றி அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் சில ஓட்டல்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இவ்வாறு சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த விஜயவாடா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றிலே இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது, இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும் 30பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஓட்டலில் 40 நோயாளிகள் மற்றும் 10 மருத்துவ பணியாளர்கள் இருந்ததாக மாநில உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இச் தீவிபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உட்பட முதல் மந்திரி ஜெஜன் மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.