இந்தியா

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

தமிழகத்தின் முக்கிய நீர் அணைகளில் தொடர்மழையால் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது, அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தின் நீலகிரி மலைத்தொடர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளில் தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் அங்கே முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இவ் அணையின் நீட்மட்ட உயரம் 105 அடி என்பது குறிப்பிடதக்கது.

மழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ள பவானிசாகர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக நொடிக்கு 1,200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதேவேளை மேட்டூர் அணையின் நீர்வரத்தும் அதிகரித்தமையால் ஓரே நாளில் நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாராம் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்துவருகிறது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி வரை காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது.

ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடையும் இந்நீரால் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து வரும் நீர்வரத்தால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.