இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களே உரிய நேரத்தில் வரி செலுத்துவோர்களாக உள்ளார்கள். அவ்வாறு நேர்மையாளர்களை கௌரவப்படுத்தி பெருமைபடுத்தும் திட்டம் அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படும். வரி விதிப்பில் நியாமான மற்றும் எளிமையான சீர்திருத்தங்கள் மூலம் நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று கூறினார்.

மேலும்; கடந்த ஆறு ஆண்டுகளில் வரிவிதிப்பு சீர்திருத்தங்கள் சிக்கல்களைக் குறைத்து, வரி விகிதங்களைக் குறைத்து, வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. இது கணினியை மிகவும் வெளிப்படையானதாகவும், சிறந்த இணக்கமானதாகவும், வரி செலுத்துவோரை நம்புவதாகவும் ஆக்கியது, இது வருமான வரி வருமான தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை 25 மில்லியனாக உயர்த்த உதவியது. தற்போது, சுமார் 70 மில்லியன் வருமான வரி வருமான தாக்கல் செய்பவர்கள் உள்ளனர். எனவும் தெரிவித்தார்.

இவ்விழாவில் நிதியமைச்சர், நிதித் துறை இணையமைச்சர். பல்வேறு வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், மற்றும் வரி செலுத்திய பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.