இந்தியா

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடர்ந்து அதிகார மோதல் இருந்துவந்தது. இதனால் கடந்த ஜூலை மாதம் சச்சின் பைலட்டின் துணை முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டதுடன் அவரது இரு ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து சச்சின் பைலட்டை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிருந்து விலக்கப்பட்டார்.

இந்த உட்கட்சி முறுகல் நிலையில் நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் ராஜஸ்தானில் முக்கியத்துவம் பெறவுள்ளது. இந்நிலையில் தனது அரசுக்கு பெரும்பான்மையை காட்ட வேண்டிய கட்டாயத்தில் அசோக் கெலாட் உள்ளார். ஆனால் அவருக்கு பெரும்பான்மை இல்லை என சச்சின் பைலட் கூறிவந்ததோடு ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளும் காங்கிரஸ்சிலிருந்து பிரிந்தும் சென்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்து பேசியதால் சமரசம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.. இதனையடுத்து இன்று முதல் மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அவரது தலைமையில் நடந்தது. இதில் சச்சின் பைலட்டிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்றுக்கொண்ட சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேரில் சென்று கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.